உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி முதல்வர் பழனிசாமிக்கு பண்ருட்டியில் வரவேற்பு

மாஜி முதல்வர் பழனிசாமிக்கு பண்ருட்டியில் வரவேற்பு

பண்ருட்டி : பண்ருட்டியில் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நெய்வேலியில் நடந்த ஜெ.சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அ.தி.மு.க.பொது செயலாளர் பழனிசாமிக்கு பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ.சத்யாபன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். இதேபோன்று வீரப்பெருமாநல்லுார், சேமக்கோட்டை, அங்குசெட்டிப்பாளையம், தட்டாஞ்சாவடி, சக்தி ஐ.டி.ஐ., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திசாலை,நான்குமுனைசந்திப்பு, சார்பதிவாளர் அலுவலகம், லிங்க்ரோடு ஆகிய 10 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நான்குமுனை சந்திப்பில் நடந்த வரவேற்பில் முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.,பொதுசெயலாளர் பழனிசாமிக்கு புத்தகம் பரிசாக வழங்கினார்.நெய்வேலியில் நடந்த சிலைதிறப்பு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.சத்யாபன்னீர்செல்வம் அ.தி.மு.க.பொது செயலாளர் பழனிசாமிக்கு நினைவுபரிசு வழங்கினார்.இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர்,மகளிர் அணியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை