கடலுார், : போதை இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் கூறினார். கடலுார் புதுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழா நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் பகுதி மற்றும் புதுப்பாளையம் பகுதி அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.எம்.ஜி.ஆர்., சிலையை, முன்னாள் அமைச்சர் சம்பத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் குமார், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம், ராமசாமி, ஜெ., பேரவை ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மன்றம் கோபு, ஜெ., பேரவை கனகராஜ், ஒன்றியக்குழு சேர்மன் பக்கிரி, மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, வர்த்தக அணி வரதராஜன், மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது. போதை இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்பதே அ.தி.மு.க., விருப்பம்.கஞ்சா பழக்கத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை, கொலை, திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றார்.