உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காஸ் இணைப்பு பரிசோதனைக்கு ரூ. 236 கட்டணமா? புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

காஸ் இணைப்பு பரிசோதனைக்கு ரூ. 236 கட்டணமா? புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

நெல்லிக்குப்பம்.: வீட்டு உபயோக சமையல் காஸ் இணைப்புகளை ரூ.236 செலுத்தி கட்டாயம் பரிசோதனை செய்யவேண்டும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கைக்கு நுகர்வோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியா முழுவதும் உள்ள வீடுகளுக்கு பாரத் பெட்ரோலியம், இண்டேன் உட்பட பல எண்ணெய் நிறுவனங்கள் சமையல் காஸ் இணைப்பு வழங்குகின்றன. தற்போது, இணைப்பு வைத்துள்ள அனைவரது வீடுகளுக்கும் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் நேரடியாக சென்று இணைப்புகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய உள்ளார்கள். இதற்காக ஒவ்வொரு இணைப்புக்கும் கட்டணமாக ரூ. 200 மற்றும் ஜி.எஸ்.டி., ரூ. 36 சேர்த்து, ரூ. 236 செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.இதன்மூலம் இணைப்பு வைத்துள்ள அனைவரும் ரூ.236 செலுத்தி பரிசோதனை செய்வது கட்டாயமாகியுள்ளது. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுபற்றி நுகர்வோர் கூறுகையில், எங்களது இணைப்பில் பிரச்னை இருந்தால் ஏஜென்ட் அனுப்பும் ஆட்களே கட்டணமின்றி சரி செய்து கொடுத்தனர். தற்போது கட்டாயம் ரூ.236 செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டுமென கூறுகின்றனர். சிலிண்டர் வாங்கவே சிரமப்படும் நிலையில் பரிசோதனைக்கு கட்டணம் என்பது தேவையில்லாதது. இந்த திட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ