உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், கனக கோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.மொழிப்போர் தியாகி கீழப்பழூர் சின்னசாமி மனைவி கமலம், மகள் திராவிடசெல்வி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தலைமை செய்தி தொடர்பாளர்கள் சூர்யா வெற்றி கொண்டான், ஹபீ சுல்லா கலந்து கொண்டு பேசினர். நகர செயலாளர் தண்டபாணி, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், நகராட்சி துணை சேர்மன் ராணி தண்டபாணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ