உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குழந்தைகளுக்கு பரிசு

 குழந்தைகளுக்கு பரிசு

கடலுார்: கடலுார் எஸ்.குமாரபுரம், கிருஷ்ணசாமி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி பாண்டியன் முன்னிலை வகித்தார். விழாவில் கடலுார் போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். ஆசிரியை கலைவாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மாலதி நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ