உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பெண்கள் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா

கடலுார் பெண்கள் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா

கடலுார் : கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடலுார் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் விஜய்பிரியா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மணி வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், வளர் இளம் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்து பேசினார். சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அல்லது அச்சுறுத்தல்களை சைல்டு லைன் உதவி எண் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.சமூக நலத்துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிதி கல்வி அறிவு நிபுணர் அருண்குமார் பேசினர்.இதில், குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி முக்கியத்துவம், குழந்தை திருமணம் குறித்த கையேடுகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர் கோபி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை