புள்ளிக்கோலம் வெற்றியாளர்கள்
முதல் பரிசு
சிக்கு(புள்ளி) கோலப்போட்டியில் முதல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நான் தினமும் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரரை வழிபடுவது வழக்கம். இதனால், கோலத்தில் சிவன் உருவம் வரைந்திருந்தேன். முதல் பரிசாக வாஷிங் மிஷின் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த முறை கோலப்போட்டியிலும் பரிசு பெறுவேன். கடலுாரில் முதல் முறையாக கோலப்போட்டி நடத்திய தினமலருக்கு நன்றி.சுசீலா, புதுவண்டிப்பாளையம்.
இரண்டாம் பரிசு
தினமலர் கோலப் போட்டி அறிவிப்பு செய்ததில் இருந்து பங்கேற்க ஆர்வமாக இருந்து வந்தேன். இரண்டாம் பரிசாக தங்க காசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிகழ்ச்சி வருங்கால பெண்களுக்கு கோலம் போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வரும் காலங்களிலும் இதுபோன்று தினமலர் கோலப் போட்டிகளை நடத்த வேண்டும்.தமிழ்ச்செல்வி, கீழ்குமாரமங்கலம்.
மூன்றாம் பரிசு
கடலூரில் தினமலர் நடத்திய கோலப்போட்டியில், ஆர்வத்தோடு கலந்துகொண்டேன். எதிர்பார்க்காத நிலையில் மூன்றாம் பரிசாக பிரிட்ஜ் வென்றது மகிழ்ச்சி. மார்கழி மாதத்தில் தினசரி அதிகாலை கோலமிடுவது உடலுக்கு நல்லது. கோலம் என்றாலே சிக்குகோலம் (புள்ளி கோலம்) தான். அதுதான் நமது பாரம்பரிய கோலம். இப்போது,சிக்குகோலம் பலர் போடுவதில்லை. ஊக்கப்படுத்தும் தினமலருக்கு நன்றி.ரஞ்சிதம் கோமதி, வி.மருதுார், விழுப்புரம்.
முதல் பரிசு
ரங்கோலியில் தானியத்தால் கோலம் போட்டிருந்தேன். முதல் முறையாக கலந்து கொண்ட போட்டியில், முதல் பரிசு கிடைத்தது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அடுத்த முறையும் கோலப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறுவேன். கடலுாரில் முதல் முறையாக கோலப்போட்டி நடத்திய தினமலருக்கு நன்றி.சந்திரலேகா, மேல்குமாரமங்கலம்.
இரண்டாம் பரிசு
இதுவரை வீட்டு வாசலில் கோலமிட்டு வந்தேன். முதல் முறையாக பொதுவெளியில் கோலமிட்டது, மிகவும் பிரமிப்பாக இருந்தது. இதுபோன்ற பிரமாண்டமாக இருந்த தினமலர் கோலப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாகவும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. சங்கீதா வசந்தராஜ், கடலுார்.
மூன்றாம் பரிசு
கோலமிடும் நமது பாரம்பரிய பழக்கம் மறைந்து வருகிறது. தினசரி கோலமிடுவது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்யம் தரும். இப்பழக்கம், நமது தலை முதல் கால் வரை பலன் தரும். நமது கலாசாரத்தை மறக்காமல் அனைவரும் கோலமிட வேண்டும். தினமலர் நடத்திய கோலப்போட்டியால், நல்ல அனுபவம் கிடைத்தது.தீபலட்சுமி, கள்ளக்குறிச்சி.
முதல் பரிசு
கடலுாரில் முதல் முறையாக தினமலர் சார்பில் நடந்த கோலப்போட்டியில் கலந்து கொள்வது ஆர்வமாக இருந்தது. முதல் போட்டியிலேயே முதல் பரிசு கிடைத்தது சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் முதல் பரிசு பெற்றது, என் குடும்பத்தினருக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த முறையும் போட்டியில் கலந்து கொள்வேன்.ப்ரீத்தி, விருத்தாசலம்.
இரண்டாம் பரிசு
தினமலர் கோலப்போட்டியில் பங்கேற்று டிசைன் கோலம் போட்டேன். 2ம் பரிசாக தங்க நாணயம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது மார்கழி மாதத்தில் மட்டுமே கோலம் போடும் பழக்கம் உள்ளது. நமது கலாசாரத்தை மறக்காமல் பின்பற்றும் வகையில், தினசரி கோலமிட வேண்டும். நமது பிள்ளைகளுக்கும் அதனை கற்றுத்தர வேண்டும். தினமலர், கோலப்போட்டியை நடத்தி, ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி.சசிகலா, மணலுார்பேட்டை.
மூன்றாம் பரிசு
பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மூன்றாவது பரிசு பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விளை நிலங்கள் அழிக்கப்பட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. பசுமையை பாதுகாக்க விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிசைன் கோலமிட்டேன். ஊக்கப்படுத்திய தினமலருக்கு நன்றி.அன்பரசி, குண்டு உப்பலவாடி.