உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் துவக்கம்!: 3 லட்சம் பசுக்களுக்கு செலுத்த இலக்கு

மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் துவக்கம்!: 3 லட்சம் பசுக்களுக்கு செலுத்த இலக்கு

கடலுார் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு 8வது 100 சதவீதம்கோமாரி தடுப்பூசி செலுத்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் வாயிலாக கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், கன்று பரிசோதனை, சினை பரிசோதனை, மலட்டு தன்மை நீக்கம், குடற்புழுநீக்கம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி போடும் பணிக்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம் நேற்று துவங்கி ஜன. 18ம் தேதி வரை நடக்கிறது. . கடலுார் அடுத்த நத்தப்பட்டு கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பசுந்தீவனம், தாது உப்புக் கலவை வழங்கினார். பின், அவர் கூறியதாவது: கால் மற்றும் வாய் கோமாரிநோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போர்க்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன்குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுகிறது. இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். பொதுவாக இந்நோய் குளிர் மற்றும்பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும்கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.எனவே, இந்நோய் கால்நடைகளுக்கு ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு டிச. 29ம் தேதி முதல் ஜன. 18ம் தேதி வரை 8வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி மூன்று லட்சம் கால்நடைகளுக்கு போடப்படவுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர்கள்தங்கள் பகுதியில் உள்ள முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை