உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஹாக்கி உலக கோப்பை கடலுாருக்கு வருகை

 ஹாக்கி உலக கோப்பை கடலுாருக்கு வருகை

கடலுார்: கடலுார் வருகை தந்த ஆண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான, உலக கோப்பையை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியா ஹாக்கி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஆண்கள் ஜூனியர் ஹாக்கிஉலகக்கோப்பை போட்டிகள் வரும் 28 ம் தேதி துவங்கி, டிச.10ம் தேதி வரை, சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. அதையொட்டி துணை முதல்வர் உதயநிதி கடந்த, 10ம் தேதி, சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், ஆண்கள் ஜூனியர்ஹாக்கி உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை,தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மன்னார்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், திருச்சி,உடுமலைப்பேட்டை, கோயம்புத்துார், குன்னுார், புளியம்பட்டி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரியை தொடர்ந்து, கோப்பை நேற்று கடலுார் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. அமைச்சர் கணேசன் இந்த கோப்பையினை விளையாட்டு வீரர்களுக்குகாட்சிப்படுத்தினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஐயப்பன் எம்.எல்.ஏ., துணைமேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி, ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், ஜி.ஆர்.கே.எஸ்டேட்ஸ் துரைராஜ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை