உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்ணதாசன் பேரவை முப்பெரும் விழா

கண்ணதாசன் பேரவை முப்பெரும் விழா

புவனகிரி: புவனகிரியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை 31ம் ஆண்டு துவக்க விழா, முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் பஸ் உரிமையாளர் சீனுபாலாஜி தலைமை தாங்கினார். பேரவை தலைவர் கல்யாண், செயலாளர் வெங்கடேசன் வரவேற்றனர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் ஜெயபாலன், ஜெயராமன், அருணாச்சலா பள்ளி நிர்வாகி ரத்தினசுப்ரமணியன், ஆரிய வைசிய சங்கத் தலைவர் சுந்தரேசன் முன்னிலை வகித்தனர்.விழாவில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகள் அபிநயா, தேவதர்ஷினி, சல்ஹபிதவுஸ் மற்றும் சிறப்பான சேவையை பாராட்டி தொழிலதிபர் சண்முகசுந்தரம் ரத்ததானகழக தலைவர் ராமச்சந்திரன், ஆசிரியை சசிக்கலா ஆகியோருக்கு விருதை , புவனகிரி ஆர்.வி.பி., மருத்துவமனை சேர்மன் கதிரவன் விருது வழங்கினார். வழக்கறிஞர்கள் குணசேகரன், பாஸ்கர், காமராஜர் பேரவை தலைவர் மோகன்தாஸ், மணிமாறன் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, பேராசிரியர் அன்பழகன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. கோகுலாச்சாரி, வெற்றி செல்வி, தியாகராஜன், கீர்த்தனா ஆகியோர் விவாதித்து பேசினர். அன்பழகன் தொகுத்து வழங்கினார். பேரவை பொருளாளர் முருகவேல் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை மன்ற தலைவர்கல்யாணசுந்தரம் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை