உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்

கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சி மாதாந்திர இயல்பு கூட்டம் நடந்தது.கெங்கைகொண்டான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கெங்கை கொண்டான் பேரூராட் சிக்குட்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு முகாம், கொசு மருந்து அடித்தல், நகரில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.கெங்கைகொண்டான் பேரூராட்சி அருகில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை சேர்மன் பெலிக்ஸ், வார்டு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை