உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு பாராட்டு

அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு பாராட்டு

சிதம்பரம் : அகில இந்திய பல்கலைக்கழக மகளிர் கால்பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணிக்கு, துணைவேந்தர் பாராட்டு தெரிவித்தார். அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான மகளிர் கால்பந்து போட்டி, மேற்கு வங்க மாநிலம், வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அணி மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றது.இதன் மூலம், அண்ணாமலை பல்கலைக்கழக அணியினர், அடுத்த மாதம் அசாமில் நடைபெற உள்ள 4வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளர். வெற்றி பெற்ற பெண்கள் கால்பந்து அணியினர் மற்றும் பயிற்சியாளர் சிவக்குமார் ஆகியோருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். உடற்கல்வி துறைத் தலைவர் ராஜசேகரன் உடனிருந்தார்.முன்னதாக, கேரளா மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டியில், ஐந்தாவது முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி தங்கப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை