உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.டி., சியோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

எஸ்.டி., சியோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி., சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் யோகா, காரத்தே போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி சான்று வழங்கினர்.பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மாவட்ட மற்றும் மாநில அளவிலான யோகா போட்டிகளில் பூதங்குடி எஸ்.டி., சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று முதலிடம் பிடித்தனர். இதில் 7 மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.அதேபோல் மாநில அளவில் நடந்த டேக்வாண்டா கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தளாளர் டாக்டர் சாமுவேல்சுஜின், நிர்வாக டாக்டர் தீபாசுஜின் ஆகியோர் பாராட்டி சான்று கேடயங்கள் வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனிராஜ் சாதனை பெற்ற மாணவர்களை பெருமை படுத்தி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை