| ADDED : ஜன 20, 2024 06:11 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு வாண்டராசன்குப்பம்,வன்னியர்புரம் கோவில்களின் மகா கும்பாபிஷேகம் வரும் 22 ம் தேதி நடக்கிறது.நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பம் மற்றும் வன்னியர்புரம் கிராமத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன், பாலமுருகன், வள்ளி தேவசேனா சமேத சக்திமுருகன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் 22ம் தேதி திங்கள்கிழமை நடக்கிறது.விழாவை முன்னிட்டு நாளை 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்ஜேஸ்வரர் பூஜை, கணபதி ேஹாமம், தனபூஜை, மகா பூர்ணாஹூதி நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது.22 ம் தேதி திங்கள்கிழமை காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், இரண்டாம்கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம் நடக்கிறது. 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து,9:15 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து 9:30 மணிக்கு பாலவிநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.9:45 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சக்தி முருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:00 மணிக்கு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.