உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டியை கொன்ற வாலிபருக்கு குண்டாஸ்

மூதாட்டியை கொன்ற வாலிபருக்கு குண்டாஸ்

கடலுார் : மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.திட்டக்குடி அடுத்த குறுக்கத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா,65; அவரது பேத்தியை, அதே கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல்,30; தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டார். அதற்கு அம்பிகா மறுத்துவிட்டார்.ஆத்திரமடைந்த வெற்றிவேல், கடந்த டிச., 10ம் தேதி அம்பிகாவை கொலை செய்து, தீயிட்டு எரித்தார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து வெற்றிவேலை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.இவரது குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராமின் பரிந்துரையை ஏற்று, வெற்றிவேலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள வெற்றிவேலிடம் திட்டக்குடி போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி