உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வீட்டில் மதுபானம் விற்றவர் கைது

 வீட்டில் மதுபானம் விற்றவர் கைது

காட்டுமன்னார்கோவில்: வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த கல்லடி குட்டை காசி மகன் சோலை மணி, 55; இவர் தனது வீட்டில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ப னை செய்து வந்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் பின்பக்கத்தில், 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து போலீசார் சோலைமணி மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை