உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேலாண்மைக்குழு கூட்டம் 

மேலாண்மைக்குழு கூட்டம் 

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி கவிதா தலைமை தாங்கினார். குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சங்கரன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ், ஆசிரியர் மகேஷ் பேசினர்.கூட்டத்தில், பள்ளியின் வருங்கால வளர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பில் சிற்றுண்டி வழங்குவதை வரவேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி