சிதம்பரம்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 38 ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில், சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயயலிதா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில், பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், துணை செயலாளர் செல்வம், நகர செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் அரிசக்திவேல், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, அம்மா பேரவை இணை செயலாளர் டேங்க் சண்முகம், ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகையன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மீர் அமீது, மார்கெட் நாகராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், பூபதி மற்றும் இளஞ்செழியன், சுரேஷ்பாபு, கர்ணா, சிவசிங்காரவேல், கருப்பு ராஜா, மருதவாணன், பாரி, தில்லை.செல்வம், பன்னீர்செல்வம், வீரமணி, மகளிரணி பானு, வளர்மதி, கீதா, சிவபுரி ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.