உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புதிய ரேஷன் கடை திறப்பு

 புதிய ரேஷன் கடை திறப்பு

வேப்பூர்: வேப்பூர் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரியநெசலுார் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ரூ., 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். அப்போது, தி.மு.க., கிளை பொறுப்பாளர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், கூட்டுறவு அலுவலர்கள் சுப்ரமணியன், ராஜகுமாரி, ரேஷன் கடை விற்பனையாளர் மீனா, ஊராட்சி செயலர் ஆதிமூலம், வி.ஏ.ஓ., கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை