உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை பணிக்காக அனுமதியின்றி வேலி அகற்றியதற்கு எதிர்ப்பு அதிகாரிகள்- பொதுமக்கள் வாக்குவாதம்

சாலை பணிக்காக அனுமதியின்றி வேலி அகற்றியதற்கு எதிர்ப்பு அதிகாரிகள்- பொதுமக்கள் வாக்குவாதம்

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சாலை பணிக்கு கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு வழங்காமல் வேலியை அகற்றியதால், அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணி சிதம்பரம் பகுதியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில், பு.முட்லுார் தீத்தாம்பாளையத்தில் முத்தையன் என்பவரின் இடம், சாலை பணிக்கு எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து கலெக்டரிடம், முத்தையன் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று திடீரென, தாசில்தார் செல்வகுமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் வந்த நெடுஞ்சாலைத் துறையினர், முத்தையன் இடத்தில் இருந்த வேலியை அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !