உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்றில் தடுப்பணை கோரி 7ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வெள்ளாற்றில் தடுப்பணை கோரி 7ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

புவனகிரி : வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, புவனகிரியில் அ.தி.மு.க., சார்பில், வரும் 7 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து, புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் வெளியிட்டுள்ள அறிக்கை:அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவுபடி, புவனகிரி சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, ஆதிவராகநல்லுாரில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட கோரி, தொகுதி மக்கள் நலன் கருதி சட்டசபையில் பேசினேன். கலெக்டர் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், தி.மு.க., அரசு இதுவரை தடுப்பணை அமைக்கவில்லை.எனவே, தி.மு.க., அரசை கண்டித்தும், புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை அமைக்க வலியுறுத்தியும், நாளை மறுநாள் (7 ம் தேதி) காலை 9:00 மணியளவில், புவனகிரியில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.இதில், பொதுமக்கள், விவசாயிகள், அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ