உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து காயமடைந்தவர் சாவு

ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து காயமடைந்தவர் சாவு

நெல்லிக்குப்பம், : வான்பாக்கத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் இறந்தார்.நெல்லிக்குப்பம், வான்பாக்கத்தை சேர்ந்தவர் மூர்த்தி,60; பூசாரி. இவர் உடல்நலக் குறைவால் கடந்த 30ம் தேதி இறந்தார். இவரது இறுதி ஊர்வலம் பெண்ணையாற்றுக்கு சென்று கொண்டிருந்த போது சிலர் வானவெடி வெடித்தனர்.அப்போது, வண்டியில் இருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்ததில், பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், பட்டாசு ஏற்றிய வந்த வண்டியில் இருந்த வான்பாக்கம் திருஞானசம்பந்தம் மகன் ராஜேஷ்; 22; உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதில், பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிகச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை