உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு

டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு

கடலுார் : குடியிருப்புகளுக்கு மத்தியில் மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலுார் புதுப்பாளையம் லட்சுமி நகர் மற்றும் பாலாஜி நகர் குடியிருப்பு மக்கள் கொடுத்துள்ள மனு;புதுப்பாளையம் வார்டு எண் 19ல் உள்ள லட்சுமி நகர், பாலாஜி நகர், முத்துகுமரன் தெருவில் 1000 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஏற்கனவே உள்ள மொபைல் போன் டவரால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள்ளது. இந்நிலையில், தனி நபர்கள் இடத்தில் தற்போது மேலும் ஒரு மொபைல் போன் டவர் அமைக்க முயன்றதை மூன்று மாதத்திற்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது மீண்டும் மொபைல் போன் டவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.எனவே, மொபைல் போன் டவர் அமைப்பதை தடை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை