உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நியமன கவுன்சிலரை ரத்து செய்ய மனு

 நியமன கவுன்சிலரை ரத்து செய்ய மனு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நியமன கவுன்சிலர், நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க - ஸ்ரீதர்; த.மு.மு.க - இக்பால்; அ.தி.மு.க - மலையான்; ஆகியோர் கமிஷனர் கிருஷ்ணராஜனிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உத்தரவுப்படி ஒரு மாற்று திறனாளி கவுன்சிலர் பதவிக்கு, 7 பேர் மனு செய்தனர். ஆனால் மயிலாடுதுறையில் வசித்த பெரோஸ்கானுக்கு கவுன்சிலர் பதவி அளித்தது தவறு. அவர் இந்த பதவிக்காக தற்போது தான் தன் மனைவியின் விலாசத்தில் தனது பெயரை இணைத்துள்ளார். நெல்லிக்குப்பத்தை பூர்வீகமாக கொண்ட, 6 பேர் மனு செய்திருந்தும் அவர்களுக்கு பதவி வழங்காதது தவறான செயல். அதனால், பெரோஸ்கான் பதவியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ