உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தே.மு.தி.க., மாநாட்டிற்கு அனுமதி எஸ்.பி.,யிடம் மனு

 தே.மு.தி.க., மாநாட்டிற்கு அனுமதி எஸ்.பி.,யிடம் மனு

கடலுார்: தே.மு.தி.க., கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து தலைமையில் தெற்கு மாவட்டசெயலாளர் உமாநாத், மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம் மற்றும் தே.மு.தி.க.,வினர் வேப்பூரில் நடக்க உள்ள மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடலுார் எஸ்.பி.,ஜெயக்குமாரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், 'கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் ஜனவரி, 9ம் தேதி, தே.மு.தி.க., உரிமை மீட்பு மாநாடு 2.0 நடக்க உள்ளது. மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் மாநாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாலு, மாவட்ட பொருளாளர் ராஜ், மாநகர செயலாளர் சரவணன், மாவட்ட துணைசெயலாளர் சித்தநாதன், மாநில பொதுக்குழு வைத்தியநாதன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கலாநிதி, மாநில பொதுக்குழு சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !