உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பிச்சாவரம் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ஆய்வு

 பிச்சாவரம் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ஆய்வு

கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், மேம்பாட்டு பணிகளை சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி தலைமை மேலாளர் ஆய்வு செய்தார். சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்கின்றனர். இந்நிலையில், பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலா மையமாக மேம்படுத்த ரூ. 10 கோடி மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக நிர்வாக அலுவலகம், சுற்றுலா பயணிகள் ஓய்வு அறை, உணவகம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம், பார்வையாளர் கோபுரம், நடை பாதை, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியை நேற்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உதவி தலை மை மேலாளர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன், சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது, ஊழியர்கள் செந்தமிழ்செல்வன், சிவராஜன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை