உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் குறைதீர்வு முகாம்

போலீஸ் குறைதீர்வு முகாம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் போலீசார் சார்பில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது.முகாமில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், சோழத்தரம், ஒரத்துார், புத்துார், குமராட்சி ஆகிய ஸ்டேஷன் பகுதி எல்லைக்குட்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் சேதுபதி, ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் முன்னிலை வகித்தனர்.பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல், இடம் சம்மந்தமான 60 மனுக்களை பெற்று விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி