உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏரியில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை

ஏரியில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ஏரியில் மிதந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலம் ஏரியில் நேற்று காலை 10:00 மணியளவில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்த பெண்ணாடம் போலீசார், திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு, விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், இறந்தவர் 5 நாட்களுக்கு முன் மீன் அல்லது கொக்கு பிடிக்க இரவு நேரத்தில் வந்திருக்கலாம் எனவும், ஏரிக்கரையில் உள்ள ஒரு பையில் அவரது உடைகள், கொக்கு பிடிக்கும் மருந்து, ஊறுகாய், மது அருந்த பயன்படுத்தும் பிளாஸ்டிக் கிளாஸ் இருந்ததாகவும், மது போதையில் ஏரிக்குள் மீன் வலை கட்ட அல்லது கொக்கு பிடிக்க சென்ற போது தவறி தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை