உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

நடுவீரப்பட்டு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் தட்சணாமூர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி கோமதி முன்னிலை வகித்தனர்.கடலுார் மேற்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் சுப்பரமணியன், 127 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் நடுவீரப்பட்டு ஞானசேகரன், அண்ணாதுரை, கல்யாணகுமார், செல்வராசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்