உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கபடி வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கல்

 கபடி வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கல்

கடலுார்: கடலுார் மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு, மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் சீருடை வழங்கி வாழ்த்தினார். திருச்சியில் 52வது ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்கி, நாளை மறுதினம் வரை நடக்கிறது. இதற்கான கடலுார் மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள கடலுார் மாவட்ட கபடி அணி வீராங்கனைகளுக்கு, கடலுார் மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் சீருடை வழங்கி வாழ்த்தினார். தி.மு.க., 3வது வார்டு நிர்வாகிகள் ராமலிங்கம், விஜயகுமார், வார்டு செயலாளர் சுப்ரமணி, முருகன், அஷ்ரப் அலி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை