உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கைலாசநாதர் கோவிலில் நாளை ரதசப்தமி விழா

கைலாசநாதர் கோவிலில் நாளை ரதசப்தமி விழா

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நாளை (16ம் தேதி) ரதசப்தமி விழா நடக்கிறது.கோவிலில் அன்று காலை 9:00 மணிக்கு கெடிலம் ஆற்றில் கைலாசநாதருக்கு தீர்த்தவாரி நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு விநாயகர்,காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சண்டிகேஸ்வரர், அம்மன், வள்ளி தேவசேனா சிவசுப்பரமணியர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் சாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி