உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன்கடை பணியாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

ரேஷன்கடை பணியாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார் : தமிழ்நாடு அரசு ரேஷன் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தங்கராசு தலைமை தாங்கினார். நடராஜன், நரசிம்மன், செல்வராஜ், தேவராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இதில், பணி வரன்முறைப்படுத்தாத பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அனைத்து வகை நோய்களுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பார்க்க காப்பீட்டு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.அப்போது, தமிழ்செல்வன், செல்லதுரை, கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ