உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கெங்கைகொண்டான் பேரூராட்சியில் இன்று எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் 

 கெங்கைகொண்டான் பேரூராட்சியில் இன்று எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் 

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் இன்று காலை கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உதவி மையம் செயல்பட உள்ளது. உதவி மையத்தில் வாக்காளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் கணக்கீட்டு படிவம் கிடைக்காதவர்கள் இம்மையத்தில் பெற்று கொள்ளலாம். வாக்காளர்களுக்கு உதவிடவும், படிவங்களை எளிதாக பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை