உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சிறப்பு தீவிர திருத்த பணி: கலெக்டர் ஆய்வு

 சிறப்பு தீவிர திருத்த பணி: கலெக்டர் ஆய்வு

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலத்தில் ஆய்வு செய்தார். அதில், தொகுதியிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் உள் பணியாளர்களின் விபரம், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்காளர் பதிவேற்றம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், தேர்தல் பணி சிறப்பு தாசில்தார் குமார கிருஷ்ணன், வி.ஏ.ஓ.,க்கள் விஷ்ணுராஜ், விஷ்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேப்பூர்-- வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், தேர்தல் பணி சிறப்பு தாசில்தார் குமார கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை