பேரூராட்சியில் சிறப்பு கூட்டம்
கடலுார்: குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சியில் வார்டு வாரியாக சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் வார்டு வாரியாக சிறப்புக்கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் பேரூராட்சி உறுப்பினர்களை சிறப்புக்கூட்டத்திற்கு தலைவராகக்கொண்டு வார்டு வாரியாக சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு வார்டில் பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் வார்டுகளில் உள்ள தேவைகள் குறித்து மனு அளித்தனர்.