உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடலுார் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடலுார் கோவில்களில் சிறப்பு பூஜை

கடலுார் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடலுார் பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.2024 புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. கடலுார் அருகே உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 3:௦௦ மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 5:00 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேப்போல புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. பாடலீஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகாதீபாராதனை நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.கடலுார் மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம், மகாதீபாராதனை நடக்கிறது. புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை