உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டு பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி

நடுவீரப்பட்டு பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கி, அவர் எழுதிய எண்ணியது நிறைவேறும் என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார். உதவி தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமார், தரணிதரன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக நுண்ணியல் பிரிவு பேராசிரியர் பூவராகமூர்த்தி கலந்து கொண்டு தமிழின் பெருமைகள் பற்றி பேசினார்.முதுகலை ஆசிரியர் வினோத், மேன்மை மிக்க தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் மகாலட்சுமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை