உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ்நாடு கிராம வங்கி அடரியில் இடமாற்றம்

தமிழ்நாடு கிராம வங்கி அடரியில் இடமாற்றம்

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே அடரியில், தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்து திறப்பு விழா நடந்தது.தமிழ்நாடு கிராம வங்கியின் அடரி கிளை அதே பகுதியில் கடலுார்-சேலம் சாலையில் இயங்கியது. இந்த வங்கி அடரியில் உள்ள தங்கராசு காம்ப்ளக்ஸ் கட்டடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது. மங்களூர் பி.டி.ஓ., வீராங்கன் தலைமை தாங்கினார். வங்கியின் அடரி கிளை மேலாளர் துர்கா பிரசாத் வரவேற்றார். விழுப்புரம் மண்டல வட்டார மேலாளர் மோகன்ராஜ் பேசினார். வங்கி கிளை மேலாளர்கள் வேப்பூர் மோகன்ராஜ், விருகாவூர் திருமால், நைனார்பாளையம் ரவிச்சந்திரன், வங்கி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், வங்கியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள், பிரதமரின் காப்பீடு, விவசாய கடன்களின் விபரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை