உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மன அழுத்தம் குறித்த தெளிவு கிடைத்தது; தினமலர் நாளிதழுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

மன அழுத்தம் குறித்த தெளிவு கிடைத்தது; தினமலர் நாளிதழுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

கடலுார் : கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மூலம், மன அழுத்தம் குறித்த தெளிவு கிடைத்தாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கடலுாரில், 'தினமலர்' நாளிதழ் நடத்திய, ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில், கல்வியாளர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். வாய்விட்டு சிரித்த அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து புத்துணர்ச்சி பெற்றதாக நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் பகிர்ந்தவை;

வெங்கட்ரமணன், முதல்வர், ஏ.கே.டி., அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி.

'தினமலர்' நாளிதழ் நடத்திய மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு பயனுள்ளதாக இருந்தது. எங்களின் சூழல் அறிந்து, கல்வியாளர்கள் மிகச்சிறந்த கருத்துக்களை கூறினர். நாங்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு பயனுள்ள ஆலோசனைகள் கிடைத்தன. பணிச்சுமையின்றி பணிபுரிவது, வேலைகளை பங்கிட்டு கொடுப்பது, வரிசைப்படுத்திக் கொள்வது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டது.

எழிலரசி, ஆசிரியர், நியூ ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி.

கருத்தரங்கிற்கு 'பிளாங்காக' வந்தேன். மன அழுத்தம் குறித்து கருத்துரை வழங்கியபோது, குழந்தையாக மாறிவிட்டேன். கல்வியாளர்கள் நகைச்சுவையாக பேசி, மகிழ வைத்தனர். மாணவர்களுக்கு அறிவை வளர்க்கும் நாமும், அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இந்த கருத்தரங்கு ஒரு 'பாசிட்டிவ் வைப்ஸ்' ஏற்படுத்தியது. இதற்காக 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.

சோபியா, ஆசிரியர், பெத்திசெமினார் பள்ளி, புதுச்சேரி.

கருந்தரங்கம் எப்படி இருக்கும் என தெரியாமல் வந்தோம். ஆனால் மிக அருமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. உற்சாகத்தை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள் கூறிய ஆலோசனைகள் எங்களை உற்சாகப்படுத்தியது. எங்களுக்கான 'தினமலர்' நாளிதழின் சேவை மறக்க முடியாது.

சுந்தரபாண்டியன், ஆசிரியர். அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்காடு.

ஆசிரியர் பணி மிகப்பெரிய சிக்கலானது. மாணவர்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். இதற்காக நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இந்த கருத்தரங்கம் அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களை 'தினமலர்' நாளிதழ் நிறுவனம் அழைத்து கவுரவித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

கலைவாணி, ஆசிரியர், போன் நேரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

சாதாரண கருத்தரங்கு என நினைத்து வந்தேன். ஆனால், இங்கு பேசிய கல்வியாளர்கள் மாணவர்கள் நலன்சார்ந்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். குறிப்பாக, மாணவர்களை எப்படி கையாள்வது, மாணவர்களின் திறமைகளை எப்படி வெளிக் கொண்டு வருவது, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை படிப்பில் முன்னேற்றமடைய என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர். பயனுள்ளதாக இருந்தது. கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை