உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தவிக்கும் அவலம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தவிக்கும் அவலம்

விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் துர்நாற்றம் வீசுவதுடன், மதுப்பிரியர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் பக்தர்கள் முகம் சுழிக்கும் அவலம் தொடர்கிறது.விருத்தாசலத்தில் பழமைவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சமீபத்தில் மாசிமக பிரம்மோற்சவம் விமர்சையாக நடந்தது. மேலும், பிரதோஷம், அஷ்டமி, கிருத்திகை உள்ளிட்ட மாதாந்திர பூஜைகளும் சிறப்பாக நடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில், கோவில் கிழக்கு கோபுர வாசலில் 25க்கும் மேற்பட்டோர் அமர்ந்து, பிச்சை எடுக்கின்றனர். அங்கேயே சாப்பிட்டுவிட்டு, கழிவுகளை வீசுகின்றனர். இயற்கை உபாதைகளையும் கழிக்கின்றனர். மேலும், மாலை நேரத்தில் மது அருந்திவிட்டு வருவோர், கோபுர நிழலில் துாங்குவதும் ஆபாச வார்த்தைகளில் திட்டிக் கொள்கின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக யாசகம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இதனால் மன நிம்மதி தேடி கோவிலுக்கு வருவோர், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, கிழக்கு கோபுர வாசலை தினசரி சுத்தம் செய்து, துாய்மையாக பராமரிக்க வேண்டும்.அங்கு பிச்சை எடுப்போரை விசாரித்து, அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆதரவில்லாத நபர்களை அரசு காப்பகத்தில் சேர்த்துவிட இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை