உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கில் மக்கள் தரிசனம்

கடலுாரில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கில் மக்கள் தரிசனம்

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரி யில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். மாசிமகத்தையொட்டி கடலுார் பாடலீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் ராஜகோபாலன், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள், திருவரசன்பிள்ளை தோட்டம் கிருஷ்ணர், திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர், வரக்கால்பட்டு செல்வமுத்து மாரியம்மன், வெள்ளப்பாக்கம் துர்க்கை, பாகூர் மூலநாதர், தேவனாம்பட்டினம் முத்தாலம்மன் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, தேவனாம்பட்டிணம் கடற்கரைக்கு மேள தாளங்கள் முழுங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.பின், அங்கு தீர்த்தவாரி, தீபாராதனை நடந்தது. புதுப்பாளையம் ராஜகோபால சாமிக்கு, தீர்த்தவாரி முடிந்து, கோவிலில் பத்தி உலாத்தல் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சரவண ரூபன் செய்திருந்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்கள், புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் கார், இருசக்கர வாகனம், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் புதுப்பாளையம் மெயின்ரோடு, பீச்ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ