உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டுமனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் தர்ணா

வீட்டுமனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் தர்ணா

விருத்தாசலம் :L வீட்டுமனை பட்டா கேட்டு, விருத்தாசலம் தனி தாசில்தார் அலுவலகத்தை பள்ளி குழந்தைகளுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கிராமத்தில் மலைவாழ் பிரிவை சேர்ந்த 10க் கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 30 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வருகின்ற னர். இதில், 8 மலைகுறவர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் தேர்வு செய்து, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம்ஏற்பாடு செய்தது.ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பட்டாவை வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருகின்றனர். இதில், ஆத்திரமடைந்த மக்கள் நேற்று பள்ளிசெல்லும் தங்களது குழந்தைகளுடன் விருத்தாசலம் தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டுஉள்ளிட்ட ஆவணங்களை தரையில் கொட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன்பின், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தனி தாசில்தார் அலுவலக அதிகாரிகள்,8 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தயார் நிலையில் உள்ளது, அதனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.அதன்பேரில், தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ