உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.கே.டி., சாலை பணி விரைந்து முடிக்க நடவடிக்கை அமைச்சர் வேலு தகவல்

வி.கே.டி., சாலை பணி விரைந்து முடிக்க நடவடிக்கை அமைச்சர் வேலு தகவல்

கடலுார்: விக்கிரவாண்டி--தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் வேலு கூறினார்.இதுகுறித்து அவர் நேற்று கடலுாரில் நிருபர்களிடம் கூறியதாவது:விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி பல ஆண்டுகளாக நடக்கிறது. இது நகாய் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், அந்த சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.சாலையில் பள்ளங்கள் குறித்து தகவல் அளிக்க 'நம்ம சாலை செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த செயலியில் புகைப்படத்துடன் தகவல் பதிவு செய்தால், 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை