உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  செயல்படாத மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு புத்துயிர் பெறுமா?

 செயல்படாத மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு புத்துயிர் பெறுமா?

த மிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு பள்ளிக்குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்காகவும், பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்யும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு துவங்க அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அக்குழுவில் பள்ளியின் தலைமைஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் 2 பேர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைப்படின், பள்ளிசாரா வெளிநபர் ஒருவர் உறுப்பினர்களாக கொண்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டது. மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற அனைத்துப்புகார்களையும், உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். மையம் புகார்களை பதிவு செய்து, பல்துறை வல்லுனர்களின் ஆலோசனையைப்பெற்று அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கும். அனைத்துப்புகார்களையும் ஒரு பதிவேட்டில் எழுதி பராமரிக்கவும், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அறிவிப்பு வெளியான சில மாதங்களில், மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு துவங்கப்பட்டதாக ஏட்டளவில் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு, செயல்படாத ஒரு அமைப்பாக மாறிவிட்டதாக கல்வி ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், 'பள்ளி மேலாண்மைக்குழுவையே, மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு என பலர் நினைத்துக்கொள்ளும் நிலை உள்ளது. பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு, பாதுகாப்பில்லாத நிலை என்பது தொடர்கதையாகவே உள்ளது. எனவே, மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவை செயல்படக்கூடியதாக மாற்றினால் மாணவ, மாணவியர் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி