உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் சோதனை... தொடருமா? மாவட்டத்தில் 2 நாளில் 119 பேர் மீது வழக்கு; 23 பேர் கைது

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் சோதனை... தொடருமா? மாவட்டத்தில் 2 நாளில் 119 பேர் மீது வழக்கு; 23 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 பேர்இறந்துள்ளனர். மேலும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் விழுப்புரம், சேலம், புதுச்சேரிமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சிமாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதன் எதிரொலியாக, கடலுார் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் அதிரடிசோதனை நடத்த போலீசாருக்கு, எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி., சவுமியா மேற்பார்வையில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி,திட்டக்குடி ஆகிய 7 சப் டிவிஷன்களில் அதிரடி மதுவிலக்கு சோதனையில்போலீசார் ஈடுபட்டனர்.மாவட்டம் முழுவதும் கடந்த 19ம் தேதி நடத்தியசோதனையில், மது கடத்திய மற்றும் விற்பனை செய்த 45 பேர் மீது போலீசார்வழக்கு பதிந்து, 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 11 லிட்டர் சாராயம், புதுச்சேரி மாநில 70 மதுபாட்டில்களை, 263 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 20ம் தேதி நடத்திய சோதனையில், 74வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 குற்றவாளிகளை கைது செய்து சிறையில்அடைக்கப்பட்டனர். இதில், 194 லிட்டர் சாராயம், புதுச்சேரி மாநில 73 மதுபாட்டில்கள், 260 டாஸ்மாக் மதுபாட்டில்கள், ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் போலீசார் நடத்திய சோதனையில், 119 பேர் மீது வழக்கு பதிந்து, 23 பேரை கைது செய்துள்ளனர். மொத்தம் 205 லிட்டர் சாராயம், புதுச்சேரி மாநில 143 மதுபாட்டில்கள், 523 டாஸ்மாக் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.பக்கத்து மாவட்டமான, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் இறந்தால் உடனடியாக, சோதனை செய்யும் போலீசார், மற்ற நாட்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவம் கடலுார் மாவட்டத்தில் நிகழாமல் தடுக்க முடியும்.ஏனெனில் கடலுார் மாவட்டத்தையொட்டி, புதுச்சேரி மாநில கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பாக்கெட்களில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால், கடலுார் மாவட்ட கிராமங்களை சேர்ந்த குடிமகன்கள், புதுச்சேரி மாநில கிராமங்களுக்கு சென்று சாராயம் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், சிலர் சாராயத்தையும் வாங்கி கடத்தி வரும் நிலையும் தொடர்ந்து வருகிறது.எனவே, தனிப்படை அமைத்து கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி விற்பதை தடுக்க காவல்துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி