உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

கடலுார் : பண்ருட்டி அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த சுந்தரவாண்டியைச் சேர்ந்தவர் குமார், 34; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி, 25; குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதனல், கணவரிடம் கோபித்துக் கொண்டு பிரியதர்ஷினி, கடலுார் அடுத்த காரைக்காட்டில் உள்ள பெரியம்மா மலர், 52; வீட்டில் தங்கியிருந்தார்.கடந்த 24ம் தேதி மதியம் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர், வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து மலர் கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை