உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரும்பு திருடிய வாலிபர் கைது

இரும்பு திருடிய வாலிபர் கைது

கடலுார் : சிப்காட் கம்பெனியில் இரும்பு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் டில்லிபாபு 37. இவர் கடலுார் செம்மங்குப்பம் சிப்காட்டில் உள்ள பயோனியர் கம்பெனியில் கட்டடப் பிரிவில் வேலை செய்கிறார். கம்பெனி வளாகத்தில் புதிய கட்டடப் பணிகள் நடக்கிறது. கட்டடப் பணிக்காக அடுக்கி வைத்திருந்த 120 கிலோ எடை கொண்ட சென்ட்ரிங் இரும்பு தகடு, பைப் போன்றவை திருடு போனது.இது குறித்து டில்லிபாபு முதுநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், செம்மங்குப்பம் ராஜேந்திரன் மகன் சசிகுமார், 28; குடிகாடு சேகர் மகன் பிரசாத் 30, மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இரும்பு திருடியது தெரிய வந்தது.இதையடுத்து, சசிகுமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். பிரசாத், ஜெகதீசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை