உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பஸ்- பைக் மோதல் இருவர் பரிதாப பலி

பஸ்- பைக் மோதல் இருவர் பரிதாப பலி

தர்மபுரி: தர்மபுரி அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில், இருவர் உடல் நசுங்கி பலியாகினறர். தர்மபுரி அடுத்த சந்தம்பட்டியை சேர்ந்தவர்கள் சவுந்தர்ராஜன் (48), அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (46). இருவரும், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சந்தம்பட்டியில் இருந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள அவர்களது உறவினரை பார்க்க பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மூக்கனூர் அருகே வந்தபோது, தர்மபுரியிலிருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர். மதிகோன்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை