மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
21 hour(s) ago
முனியப்பன் கோவில் திருவிழா
21 hour(s) ago
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் அதிபன் சேர்ப்பு
21 hour(s) ago
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
30-Dec-2025
தர்மபுரி:சேலத்தில் நடந்த சர்வதேச கராத்தே போட்டிகளில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., உள் விளையாட்டு அரங்கத்தில், சர்வதேச கராத்தே போட்டிகள் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், பாலக்கோடு செயின்ட் லூசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.செயின்ட் லூசிஸ் பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவி ஷில்பா, 36 கிலோ முதல் 40 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். இதே பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் தரணிஷ்குமார், 31 முதல் 35 கிலோ எடை பிரிவில் தங்கம் பதக்கம் பெற்றார். இப்பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி பிரீத்தி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.மேலும், இப்பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் அறிவரசு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி லோகேஸ்வரி வெள்ளிப்பதக்கம் வென்றனர். எட்டாம் வகுப்பு மாணவன் ராமமூர்த்தி வெள்ளிப்பதக்கமும், நான்காம் வகுப்பு மாணவன் ஹரிஹரன் வெங்கலப் பதக்கமும் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் லூர்துமேரி பாராட்டினார். மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியை தர்மபுரி மாவட்ட கராத்தே சங்கத் தலைவர் கிராண்ட் மாஸ்டர் ஷிகான் நடராஜ் வழங்கினார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
30-Dec-2025