உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அஜ்ஜனஅள்ளி பஞ்.,தலைவர் பதவி நீக்கம்

அஜ்ஜனஅள்ளி பஞ்.,தலைவர் பதவி நீக்கம்

தர்மபுரி: முறைகேட்டில் ஈடுபட்ட அஜ்ஜனஅள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம் செய்து கலெக்டர் லில்லி உத்தரவிட்டார்.பென்னாகரம் யூனியனுக்கு உட்பட்ட அஜ்ஜனஅள்ளி பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி. இவர் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிக்கு வந்த தொழிலாளர்களை பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி, அவரது நிலத்தில் விவசாய பணிக்கு ஈடுபடுத்தியுள்ளார்.தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிர்வாக சீர்கேடு செய்து, அரசை ஏமாற்றியது தொடர்பாக அவர் மீதான குற்றச்சாட்டுக்கு மூர்த்தி அளித்த விளக்கம், மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து கலெக்டர் லில்லி பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து மூர்த்தியை நீக்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை